இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதமடித்தார் கே எல் ராகுல்

லார்ட்ஸ்: லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது. ராகுல்(53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
3வது நாள் ஆட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. ராகுல், ரிஷாப் இணைந்து ரன்களை சேர்த்தனர். இந்த போட்டியில் அரைசதம் அடித்த ரிஷாப், 74 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடிய கே எல் ராகுல் 1 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.