சதம் விளாசினார் ஆயுஷ்: இளம் இந்திய ரன் குவிப்பு

பெக்கன்ஹாம்: முதல் 'யூத்' டெஸ்டில் இந்திய கேப்டன் ஆயுஷ் சதம் கடந்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெக்கன்ஹாமில் முதல் டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (14) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஆயுஷ் மத்ரே, விஹான் மல்ஹோத்ரா ஜோடி நம்பிக்கை தந்தது. ஆயுஷ் சதம் (102) விளாசினார். விஹான் அரைசதம் (67) கடந்தார்.
பின் இணைந்த அபிக்யான் (90), ராகுல் குமார் (85) கைகொடுத்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 450 ரன் எடுத்திருந்தது. அம்ப்ரிஷ் (31), ஹெனில் படேல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அலெக்ஸ் கிரீன், ஜாக் ஹோம், ஆர்ச்சி வாகன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவின் கடன் வலையில் வங்கதேசம்: இந்தியாவுக்கு புதிய தலைவலி
-
நாளை திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் 'பார்க்கிங்' இடங்கள் அறிவிப்பு போக்குவரத்து மாற்றம்
-
லாரி மோதி ஒருவர் பலி
-
சமூக, நிதி அதிகாரம் அளிக்கும் முயற்சிகளில் சுய உதவிக் குழுக்களின் பங்கு உள்ளது மத்திய நிதித்துறை அமைச்சக செயலாளர் பேச்சு
-
புது மனைவி, தாய் உட்பட மூவரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது
-
மத்திய அரசின் 16வது வேலைவாய்ப்பு திருவிழா
Advertisement
Advertisement