விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் 'சாம்பியன்'

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையரில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' போலந்தின் இகா ஸ்வியாடெக் 24, 'நம்பர்-12' அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 23, மோதினர். முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டையும் 6-0 என வென்றார்.

மொத்தம் 57 நிமிடம் நீடித்த பைனலில் அசத்திய ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே பிரெஞ்ச் ஓபனில் 4 (2020, 2022, 2023, 2024), யு.எஸ்., ஓபனில் ஒரு முறை (2022) கோப்பை வென்றிருந்தார்.

விம்பிள்டன் பைனலில் 6-0, 6-0 என வெற்றி பெற்ற 2வது வீராங்கனையானார் ஸ்வியாடெக். இதற்கு முன் 1911ல் பிரிட்டனின் டோரோதியா லம்பர்ட் சேம்பர்ஸ், சகவீராங்கனை டோரா பூத்பிக்கு எதிராக இப்படி வென்றிருந்தார். 'ஓபன் எரா'வில் இப்படி வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஸ்வியாடெக்.



@quote@

ரூ. 35 கோடி



பரிசு பைனலில் வெற்றி பெற்ற போலந்தின் ஸ்வியாடெக், கோப்பையுடன் ரூ. 35 கோடி பரிசு பெற்றார். பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த அனிசிமோவாவுக்கு, ரூ. 17 கோடி பரிசு வழங்கப்பட்டது.quote

Advertisement