வில்வித்தை: ஜோதி 'ஹாட்ரிக்' பதக்கம்

மாட்ரிட்: உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவின் ஜோதி மூன்று பதக்கம் வென்றார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 4') தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, சீனதைபே மோதின. ஜோதி சுரேகா, பர்னீத் கவுர், பிரித்திகா பிரதீப் அடங்கிய இந்திய அணி 225-227 (57-57, 58-56, 55-56, 55-58) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஜோதி 'ஹாட்ரிக்': கலப்பு அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, எல் சால்வடார் மோதின. ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் அடங்கிய இந்திய அணி 156-153 (39-39, 38-36, 39-39, 40-39) என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
பெண்கள் தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, பிரிட்டனின் எல்லா கிப்சன் மோதினர். இதில் ஜோதி 147-148 என தோல்வியடைந்து வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் ஜோதி கைப்பற்றிய 'ஹாட்ரிக்' பதக்கம் (2 வெள்ளி, ஒரு வெண்கலம்) ஆனது.

Advertisement