அனிமேஷ் நான்காவது இடம் * டைமண்ட் லீக் தடகளத்தில்...

மொனாக்கோ: மொனாக்கோவில் 'டைமண்ட் லீக்' தடகளம் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., (23 வயது) ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுர் 22, பங்கேற்றார். இப்போட்டியில் தேசிய சாதனையாளரான (20.32) அனிமேஷ், இம்முறை சர்வதேச அரங்கின் முன்னணி வீரர்களுக்கு இணையாக சவால் கொடுத்து ஓடினார். 20.55 வினாடி நேரத்தில் வந்து, நான்காவது இடம் பிடித்தார்.
கவுட் பிளேஸ்டு (20.10, ஆஸி.,), புசாங் (20.28, போஸ்ட்வானா), நயீம் ஜாக் (20.42, தெ.ஆப்.,) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
அவினாஷ் சோகம்
3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சபிள் 30, பங்கேற்றார். கடைசியாக பங்கேற்ற இரு டைமண்ட் லீக் போட்டியில் 13, 8வது இடம் பெற்ற அவினாஷ், இம்முறை தடுமாறினார். நீரில் குதித்த போது, முன்னாள் சென்ற வீரர் மீது, அவினாஷ் மோதி விழுந்தார். இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் விலகினார்.

Advertisement