ஆசிரியர் தொடர் பாலியல் தொல்லை: மாணவி தீக்குளிப்பு

2

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால், விரக்தியடைந்த மாணவி தீக்குளித்தார். இதனால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகிர் மோகன் கல்லூரியில் ஒருங்கிணைந்த பிஎட் படிப்பில் மாணவி ஒருவர் படித்து வந்தார். இதன் துறை தலைவராக இருக்கும் சமீர் குமார் சாஹூ, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தனது பாலியல் இச்சைக்கு இணங்காவிட்டால், எதிர்காலத்தை அழித்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து, மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே சென்று தீக்களித்தார். இதில் 95 சதவீத காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு மாணவருக்கும் 75 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, அந்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த பேராசிரியரையும், கல்லூரி முதல்வரையும் சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement