கூட்டமைப்பு துவக்க விழா

சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் 2025- -- 26ம் கல்வியாண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.

டெக்கியோன் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை தரவு ஆய்வாளர் பூஜா முத்துக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் காளிதாச முருகவேல் முன்னிலை வகித்தார்.2024--25 கல்வியாண்டிற்கான செயல் திட்டங்கள் பற்றி கூறப்பட்டது. 2025 -- 26ம் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட உள்ள செயல் திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

Advertisement