ஊழல் அரசுகள்!

இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி என, கேரளாவில் அடுத்தடுத்து வந்த அரசுகள் ஊழலை மட்டுமே உருவாக்கின. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா போல் தேச விரோத சக்திகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாற்றின; எனவே, பா.ஜ., தலைமையிலான ஆட்சி மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை கொண்டு வர முடியும்.

அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

உண்மை நிலை!



நம் நாட்டில், பள்ளி மாணவர்கள் இடையே கற்றல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை மத்திய அரசின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. நம் நாட்டில், கல்வியின் உண்மை நிலையை, பிரதமர் மோடியின் 'பரிக்ஷா பே சர்ச்சா, எக்ஸாம் வாரியர்ஸ்' போன்ற சுயவிளம்பர நிகழ்வுகளால், மூடி மறைக்க முடியாது. இது அரசின் அலட்சியம்.

மல்லிகார்ஜுன கார்கே, தேசிய தலைவர், காங்கிரஸ்

கடும் நடவடிக்கை!



கேரளாவின் இரு சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்களை, ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்ய வைத்தது கண்டனத்துக்குரிய செயல். இது, மாணவர்கள் இடையே அடிமைத்தனத்தையே விளைவிக்கும். கல்வி என்பது, அறிவையும் சுயசிந்தனையையும் அளிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவன்குட்டி,, கேரள அமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

Advertisement