பொறியியல் கல்லுாரிகளில் போலி பேராசிரியர்கள்

சென்னை : போலி பேராசிரியர்களுடன் பொறியியல் கல்லுாரிகள் இயங்குவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழகத்தில், ஓராண்டிற்கு முன், அண்ணா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், 295 பொறியியல் கல்லுாரிகளில், 2,000க்கும் அதிகமான போலி பேராசிரியர்கள் இருப்பதும், ஒரே பேராசிரியர் 33 கல்லுாரிகளில் பணிபுரிவதும், உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, உயர் கல்வித்துறை சார்பில், அமைக்கப்பட்ட குழு, அபராதம் விதிப்பது; பணியில் இருந்து நீக்குவது; கல்லுாரியின் அங்கீகாரம் ரத்து செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால், அதை செயல்படுத்த, அண்ணா பல்கலை இதுவரை முன்வரவில்லை. இதனால், போலி பேராசிரியர்களுடன், பொறியில் கல்லுாரிகள் இயங்குவது தொடர்கிறது.



தி.மு.க., வின் செயலற்ற தன்மை, போலி பேராசிரியர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, உயர் கல்வித்துறை குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதோடு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் விதிமுறைக்கு ஏற்ப பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement