விளையாடிய குழந்தைகள் குண்டு வெடிப்பில் பலி
ஏடன்: ஏமனின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து குழந்தைகள் அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான ஏமனின் தாய்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு, ஹவுதி படையினருக்கு எதிரான இஸ்லாஸ் கட்சியின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் குண்டு வீச்சில் ஈடுபட்டனர்.
அது, குடியிருப்பு பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அருகே விழுந்து வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டனர். பரிசோதித்த டாக்டர்கள், 7 முதல் 12 வயது வரையிலான ஐந்து குழந்தைகள் இறந்ததாக அறிவித்தனர்.
மேலும் மூன்று குழந்தைகள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஏமன் மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement