ஹரித்துவாரில் சிக்கிய 125 கிலோ வெடிபொருட்கள்: கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உஷார்நிலை

டேராடூன்; கன்வர் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் டேராடூனில் 125 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வட மாநிலங்களில் சிவபக்தர்கள் ஆண்டுதோறும் கன்வர் யாத்ரா என்ற காவடி யாத்திரையை கொண்டாடுவர். கங்கை நதியை ஒட்டிய புனித தலங்களுக்கு நடைபயணமாக சென்று அங்கு கலசங்களில் நீரை சேகரித்து தங்களின் ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வர்.
இந்த புனித யாத்திரை வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தம். நடப்பு ஆண்டுக்கான கன்வர் யாத்ரா கடந்த 11ம் தேதி தொடங்கி இருக்கிறது.
இந் நிலையில், 125 கிலோ வெடிபொருட்களை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டியுனி என்ற பகுதியில் உள்ளூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது அதில் இருந்த 3 பேர் முன்னுக்கு முரணாக பேசி உள்ளனர்.
அவர்களின் காரில் 5 மிக பெரிய பெட்டிகளில் டைனமெட் வெடி பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரின் பெயர்களும் ரிங்கு, ரோகித், சுனில் என்பது தெரிய வந்தது. அனைவரும் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் இடையே சாலை கட்டுமான பணிகளுக்கு வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்று பிடிபட்ட 3 பேரும் கூறி உள்ளனர்.
ஆனால் அதில் உள்ள உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ள போலீசார், எதற்காக வெடி பொருட்கள் கடத்தப்பட்டன, என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டேராடூன் எஸ்.எஸ்.பி., அஜய் சிங் கூறுகையில், உத்தராகண்டில் பஞ்சாயத்து தேர்தல்கள் வரும் ஜூலை 24 மற்றும் 28 தேதிகளில் நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
கன்வர் யாத்திரையும் தொடங்கி உள்ளது. தேர்தல் நேரம், கன்வர் யாத்திரை காலம் என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்றார்.
ஹரித்துவார் எஸ்.எஸ்.பி., பிரமோத் சிங் கூறுகையில், 125 கிலோ வெடிபொருட்கள் சிக்கியதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. தற்போது கன்வர் யாத்திரை உச்சக்கட்டத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஹரித்துவார் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். எனவே, வெடி பொருட்கள் சிக்கியதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
மேலும்
-
ஐவகை பழங்கள், ஆக்சிஜன் வழங்கும் சந்தன மூங்கில் வீட்டுத்தோட்டத்தை பராமரிக்கும் தம்பதிக்கு குவியும் பாராட்டு
-
கூடலுார் நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை
-
புதிதாக பதித்த குழாயில் கசிவு சாலையில் தேங்கிய குடிநீர்
-
தாடண்டர் நகர் குடியிருப்பில் மாநகராட்சி துாய்மை பணி
-
பா.ஜ., பூத் கமிட்டி கலந்தாய்வு
-
ஸ்ரீவி., புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்