அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது; காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பல் பதுங்கி இருப்பதை எப்.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, மோசடி கும்பலை பிடிக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கைத்துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், 15 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ரொக்கம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கும்பல் சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் எப்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர்.
அவனை பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
வள்ளுவருக்கு காவியடித்து திருட பார்க்கின்றனர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பொக்லைன் இயந்திரம் கார் மீது விழுந்து விபத்து
-
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை
-
பெரியபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
-
ரயில்வே மேம்பால பகுதியை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
-
ஆகாயத்தாமரை சூழ்ந்த குளம் மீஞ்சூர் நிர்வாகம் பாராமுகம்