பெரியபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஊத்துக்கோட்டை:பவானியம்மன் கோவில் செல்லும் வழியில், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தற்காலிக தகர கொட்டகைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் கிராமம் உள்ளது. இங்கு, புகழ்பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் துவங்கவுள்ள நிலையில், முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வரும் நிலையில், கோவிலுக்கு செல்லும் வழியில், வியாபாரிகள் தற்காலிக கொட்டகை அமைத்து, வியாபாரம் செய்து வந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சமீபத்தில், ஆடி மாத திருவிழாவை ஒட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினர், நேற்று முன்தினம் மாலை ஆக்கிரமிப்பு பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு