தினம், தினம் எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கும் திருமா; இன்றும் அ.தி.மு.க.,வுக்கு தான்!

மதுரை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று ( ஜூலை 13), "கூட்டணி ஆட்சி என்பதை அ.தி.மு.க., தான் அறிவிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இது தொடர்பாக மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: நான் தான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி இருக்கிறேன். சொல்லிக் கொண்டு வருகிறேன். அது பொருந்தா கூட்டணி.
கொள்கை அளவில் மட்டும் அல்ல. செயல் அளவிலும் கூட அவர்களால், இணக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாத அளவுக்கு, அவர்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது. வெளியே நிற்கும் சில கட்சிகளை உள்ளே இழுப்பதற்காக, அமித்ஷா கூட்டணி ஆட்சி, கூட்டணி ஆட்சி என்று ஆசை காட்டுகிறார்.
ஆண்ட கட்சி
அ.தி.மு.க., தமிழகத்தில் ஒரு வலுவான கட்சி. ஆண்ட கட்சி. ஆனால் அந்த கட்சியின் விருப்பத்திற்கு மாறாக அமித்ஷா தன் விருப்பம்போல் கருத்துக்களை சொல்லி வருகிறார். அ.தி.மு.க., வின் முன்னணி தலைவர்கள் ஒன்று கூடி, அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
அ.தி.மு.க., தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சி என்று அறிவித்தால் தான், அது அதிகாரப்பூர்வமானது. அமித்ஷா சொல்லிக் கொண்டிருக்கும் வரையில், அ.தி.மு.க.,வை அவர் ஒரு கிள்ளு கீரையாக கருதுகிறார் என்று மட்டுமே உணர முடியும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
கேள்வியும், பதிலும்!
நிருபர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தி.மு.க., கூட்டணி சுக்குநூறாக உடையும் என்று கூறியுள்ளாரே?
திருமா பதில்: அது அவருடைய ஆசையாக இருக்கலாம். அவருடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறுவதற்கு தமிழகம் இடம் கொடுக்காது.










மேலும்
-
வேகவதி ஆற்று கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
-
கோனேரிகுப்பம் உடற்பயிற்சி கூடத்தில் பழுதாகி வீணாகும் உபகரணங்கள்
-
ஜூலை 30 வரை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்
-
இந்தியா வெற்றிக்கு தேவை 135 ரன்... * 'விறுவிறு' கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்
-
செவ்வாய் கிரக கல்; டைனோசர் எலும்புக்கூடு அமெரிக்காவில் விசித்திர பொருட்கள் ஏலம்
-
போஹன்கோவா 'சாம்பியன்' * விம்பிள்டன் ஜூனியர் டென்னிசில்...