பா.ஜ., பூத் கமிட்டி கலந்தாய்வு

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதியில் பா.ஜ., பூத் கமிட்டியை வலிமையாக்குவதற்கான கலந்தாய்வு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.

இதில் விருதுநகர் நகராட்சி 11வது வார்டில்102வது பூத் உள்ள வாக்காளர்கள் பட்டியல் தரவுகள் குறித்து அறிக்கை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் பா.ஜ.,விற்கான ஓட்டுக்களை சேகரிக்க செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வீடுகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற ஸ்டிக்கரை ஒட்டும் பணியை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். வீட்டில் உள்ளவர் குழந்தைகளின் கல்வி குறித்து கேட்டறிந்தார்.

இதன் பின் சாத்துாரில்ம.தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட செய்தியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து, வழக்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். இதில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், நகரத் தலைவர் மணிராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement