புதிதாக பதித்த குழாயில் கசிவு சாலையில் தேங்கிய குடிநீர்

ராமாபுரம்:புதிதாக பதிக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டு, ராமாபுரம் திருவள்ளூர் சாலையில் தண்ணீர் தேங்கியது.

வளசரவாக்கம் மண்டலம், 149 மற்றும் 152வது வார்டில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக, குழாய் பதிக்கப்பட்டது. தண்ணீர் வினியோகத்திற்கு ஏற்ப, குழாய் தயார்நிலையில் உள்ளதா என, அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் கசிந்து, சாலையில் நேற்று வழிந்தோடியது. இதனால் சாலையில், ஆங்காங்கே குளம் போல் குடிநீர் தேங்கியது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் தண்ணீர் கசிகிறதோ, அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்படும்' என்றனர்.

Advertisement