உறவை மேம்படுத்த விரும்பும் வங்கதேசம்: மோடிக்கு மாம்பழம் அனுப்பினார் முகமது யூனுஸ்

டாக்கா: வங்கதேசத்தில் விளைச்சல் ஆகியுள்ள ஆயிரம் கிலோ எடை கொண்ட 'ஹரிபங்கா' மாம்பழங்களை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அனுப்பி வைத்துள்ளார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டத்தால், கடந்தாண்டு ஆகஸ்ட் 5ல் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவுடன் நல்ல நட்புறவை பேணியவர். அவர் பதவி இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். கடந்த, 1971ல் பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்த பின், முதன் முறையாக பாகிஸ்தான் உடன் வர்த்தக உறவை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்தியா வங்கதேசம் இடையிலான உறவு சிக்கலடைந்துள்ளது.
இதனிடையே தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை , முகமது யூனுஸ் சந்தித்து பேசினார். ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளதாக மோடி தெரிவித்து இருந்தார். இரு நாட்டு பிரச்னைகளை ஆக்கப்பூர்வமான சூழ்நிலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.
வங்கதேசத்தில் அதிகம் விளைச்சல் ஆகும் ஹிபங்கா மாம்பழங்களை அந்நாட்டு அரசு இந்தியத் தலைவர்களுக்கு பல தசாப்தங்களாக அனுப்பி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் இந்திய அரசுக்கு ஆயிரம் கிலோ எடை கொண்ட மாம்பழங்களை முகமது யூனுஸ் அரசு அனுப்பி வைத்துள்ளது. இவை நாளை இந்தியா வந்தடையும் என டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிபுரா முதல்வர் மாணிக் சஹாவுக்கும் மாம்பழங்களை வங்கதேசம் அனுப்பி வைத்துள்ளது.
இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் , அந்நாடு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளது என்பது உறவை சீர்படுத்த முயற்சி செய்வதை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.







மேலும்
-
இயந்திரமயமாக்கலில் விவசாயிகள் ஆர்வம்; 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியில் அப்பட்டம்
-
மகாராஷ்டிராவில் ரூ.1.50 கோடி கொள்ளை தப்பி வந்த 6 பேர் கேரளாவில் சிக்கினர்
-
கேரளாவில் அதிகரித்து வரும் நிபா வைரஸ்; வால்பாறையில் பரிசோதனை அவசியம்
-
கதர் வாரிய ஊழல் குறித்த புத்தகம் வெளியிட்டார் முன்னாள் ஊழியர்
-
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்
-
உயர்தர ஆய்வகம் பணிகள் தீவிரம்