குளிர்பதன கிட்டங்கி அமைக்க வலியுறுத்தல் * வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் ஒன்றிய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு, தலைவர் சூரியா தலைமையில் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ராஜ்குமார், ரகு கண்ணன் முன்னிலை வகித்தனர்.
எம்.பி., சச்சிதானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் ரஞ்சித் ஆகியோர் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினர். பொருளாளர் பிரேம்குமார் துவக்கி வைத்தார். தலைவர் பாலாஜி, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். திண்டுக்கல்--பழநி இடையே அனைத்து பயணிகள் ரயிலும் நின்று செல்லும் வகையிலும், வட்டார அரசு மருத்துவமனை, பால் குளிர்பதன கிட்டங்கி ஆகியவை அமைக்க வலியுறுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தலைவர் மணிகண்டன், செயலாளர் சூர்யா, பொருளாளர் சபரி, துணைத் தலைவர்கள் ராஜ்குமார், நவீன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.உறுப்பினர் சபரி நன்றிகூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement