கோம்பு பள்ளத்தை துார்வார பொதுமக்கள் வேண்டுகோள்

குமாரபாளையம்: குமாரபாளையம், கோம்பு பள்ளம் என்பது, நகரின் கழிவுநீரை வெளியேற்றும் கால்வாய் ஆகும். கத்தேரி பகுதியில் தொடங்கி, ஓலப்பாளையம், கம்பன் நகர், நடராஜா நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரந்தார்காடு, சின்னப்பநாயக்கன்பாளையம், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், உடையார்பேட்டை, மணிமேகலை வீதி வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அனைத்து மழை நீரும் இந்த கோம்பு பள்ளத்தின் வழியாக சென்று காவிரியில் கலப்பதால், நகரில் எந்த பாதிப்பும் ஏற்படாது.


தற்போது மழைக்காலம் என்பதால் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த கோம்பு பள்ளத்தில், செடி, கொடிகள், சிறிய அளவிலான மரங்கள் தண்ணீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளது. இவற்றை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டைமேடு வழியாக வரும் பெரும்பள்ளத்தை கூட துார்வார வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement