10 ஆண்டுகளாக பராமரிப்பற்ற பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வண்டலுார்:வண்டலுாரில், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி விரிவு, 13வது வார்டில் உள்ள வால்மீகி தெருவில், 22 சென்ட் பரப்பில் பாரதி திடல் என்ற பூங்கா உள்ளது.
இப்பகுதி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான இப்பூங்கா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பராமரிப்புமின்றி உள்ளது.
பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், இங்குள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும், துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளன.
பூங்காவை புனரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பூங்காவை புனரமைக்க, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது
-
வனக்காவலரை தாக்கிய யானை பின்னங்காலை பிடித்து தப்பினார்
-
77 ரயில்களின் சேவை பாதிப்பு
-
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி பலி கார் பலத்த சேதம்
-
விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை
-
பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது