விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் விருந்துக்கு சென்ற இடத்தில் கடை ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
புதுவயல் பங்களா ஊருணியைச் சேர்ந்தவர் முத்து. இவர் துணி அயர்ன் செய்யும் கடை நடத்தி வருகிறார். கடையில் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த அரசு 50, தேவகோட்டை அருணகிரிபட்டணத்தைச் சேர்ந்த அன்புராஜ் வேலை செய்தனர்.
நேற்று அப்பகுதியில் நடந்த திருவிழாற்கு ஊழியர்கள் இருவரையும் முத்து விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு வந்த இருவரும் அப்பகுதியில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமுற்ற அன்புராஜ் பீர் பாட்டிலால் அரசின் கழுத்தில் குத்தினார். படுகாயம் அடைந்த அரசை அங்கிருந்தோர் புதுவயல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அரசு இறந்தது தெரிந்தது. சாக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
அரசு பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைப்பதா? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்
-
தனிக்கட்சி தொடங்க திட்டமா? செப்., 4ல் அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.,
-
சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு: கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி
-
கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்