நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி பலி கார் பலத்த சேதம்

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடந்து சென்றவர்கள் மீது டூவீலர் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமுற்றனர். டூவீலர் மோதியில் எதிரே வந்த காரும் சேதமடைந்தது.

காரியாபட்டியில் மதுரை -- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை சீரமைப்பு பணிக்காக தார் கலவை பிளான்ட் தனியார் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கி ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்றிரவு அங்கு பணிபுரிந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை, குமார், வெங்கடேஷ், செல்வம் காரியாபட்டியிலிருந்து பிளான்ட்க்கு திரும்பி கொண்டிருந்தனர். மந்திரிஓடை பஸ் டிப்போ அருகில் நேற்றிரவு 9:00 மணிக்கு பின்னால் கம்பிக்குடி இமானுவேல்சாமி 23, ஓட்டிய டூவீலர் மோதியதில் ஏழுமலை 54, சம்பவயிடத்திலேயே பலியானார். அப்போது எதிரே மந்திரிஓடை பாலமுருகன் ஓட்டி வந்த கார் மீதும் டூவீலர் மோதியதில் முன் பக்கம் நொறுங்கியது. குமார், இம்மானுவேல்சாமி பலத்த காயமுற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement