மில் விடுதி அறையில் வாலிபர் தற்கொலை

அவிநாசி; திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, ஜமுனா மரத்துார் தாலுகா, வண்ணான்குட்டையை சேர்ந்த பெருமாள் மகன் குமரேசன், 22.

சேவூர் - புளியம்பட்டி ரோட்டில் தாளக்கரை பிரிவு எதிரே உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இரவு பணிக்கு வெகு நேரம் ஆகியும் குமரேசன் வராததால் அறைக்குச் சென்று சூப்பர்வைசர் பார்த்தபோது குமரேசன் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement