வாகனங்களில் பேட்டரி திருட்டு

போத்தனுார்; கோவை, போத்தனுாரிலுள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாரூக். மினி டார் வாகனம் வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். சில வாரங்களுக்கு முன், வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது வாகனத்திலிருந்த பேட்டரியை, மர்ம நபர் திருடிச்சென்றார்.

அதுபோல் வேலாயுதம் சேர்வை லே- அவுட்டை சேர்ந்த கார்த்தி மற்றும் முதலியார் வீதி பகுதியை சேர்ந்த அஜிஸ் ஆகியோரது ஆட்டோக்களிலிருந்தும், பேட்டரி திருட்டு போனது.

இந்நிலையில் கரும்புக்கடை, சாரமேடு, சவுகர் நகரில் மர்ம நபர்கள் வாகனங்களிலிருந்து பேட்டரி திருடிச் செல்லும் வீடியோ காட்சி, வெளியாகி வைரலாகி வருகிறது.

போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சம்பவத்தில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement