கொளத்துார் ரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலய விழா

திருப்போரூர்:கொளத்துார் ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று, பாலாலய விழா நடைபெற்றது.

திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ரங்கநாத பெருமாள், நின்றகோலத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அருள்பாலிக்கிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று, மங்கள இசையுடன் பாலாலய விழா துவங்கியது. மகா கணபதி வழிபாட்டை தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் செய்து சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

விழாவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement