காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!

ஜெருசலேம்: காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, 2023 அக்டோபரில் போர் துவங்கியது. காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன.
இங்கு நாளொன்றுக்கு ஐந்து சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. காசாவில் உதவி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்களும் அடங்குவர். இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.
















மேலும்
-
ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'
-
திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு ரத்து
-
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
-
மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ரயில்வேயில் எந்த வேலைக்கும் தகுதி வாய்ந்த ஆள் இல்லை; ராமதாஸ் குற்றச்சாட்டு
-
10 இடங்களில் வெயில் சதம்