அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு

3


வாஷிங்டன்: அமெரிக்காவின் கென்டக்கி நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். கொலையாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.


அமெரிக்காவில் கென்டக்கி நகரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் சர்ச் உள்ளது. இந்த சர்ச்சில் திடீரென மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஆண்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் பெவர்லி கம் (72), கிறிஸ்டினா கோம்ப்ஸ் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டாலும், அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை.



இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கென்டக்கி கவர்னர் பெஷியர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த வன்முறை செயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.


இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிக்கு விரைவான பதில் அளித்த போலீசாருக்கு நன்றி தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement