முருகப்பா ஹாக்கி போட்டியில் தமிழகம் - போபால் அணி ' டிரா ' மாறி மாறி கோல் அடித்து விறுவிறுப்பு

சென்னை:முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில், தமிழகம் மற்றும் சாய் என்கோ போபால் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கோல்களுக்கு கோல் பதிலடியாக இருந்ததால், 'டிரா'வில் முடிந்தது.
எம்.சி.சி., முருகப்பா குரூப் சார்பில், அகில இந்திய அளவிலான, 96வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கின்றன. தமிழகம், மஹாராஷ்டிரா, இந்திய ரயில்வே, கர்நாடகா உள்ளிட்ட 10 அணிகள் இரு பிரிவாக மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில் இந்திய கடற்படை மற்றும் மலேசியா ஜூனியர் நேஷனல் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்திய கடற்படை அணி, 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று மாலை நடந்த ஆட்டத்தில், தமிழகம் மற்றும் சாய் என்கோ போபால் அணிகள் மோதின. முதல் பாதியில் இருந்து, கடைசி நேர ஆட்டம் வரை இரு அணிகளிடம் எதிர்பார்ப்பு குறையவில்லை. முடிவில், 4 - 4 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
தமிழக அணியில், பத்ராஸ், பாலச்சந்தர் தலா ஒரு கோல்களும், சோமண்ணா இரண்டு கோல்களும் அடித்தனர். அதேபோல், போபால் அணிக்கு, முகமது சைத், மஞ்சீத் ,மணிஷ் சஹானி, அமித் யாதவ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
போட்டி முழுதும், இரு அணி வீரர்களும் கோல்களுக்கு கோல் அடித்து திரில்லிங் தந்த நிலையில், இறுதியில் சமநிலையில் முடிந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
மேலும்
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்