கல்லா கட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள்

ஆவடி,:திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் எரிந்ததால், அந்த தடத்தில் பயணிப்போருக்கான ரயில் சேவையில் பாதிக்கப்பட்டது.

எனவே, பயணியர் வசதிக்காக, ஆவடியில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்படும் தடம் எண்: 572 அரசு பேருந்து, நேற்று மட்டும் 43 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஞாயிறுதோறும் இவ்வழித்தடத்தில் நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.

ரயிலில் பயணிக்க வேண்டிய பயணியர், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், அதிகம் கல்லா கட்டினர்.

பட்டாபிராமில் இருந்து ஆவடி வரை செல்ல 20 ரூபாய் வசூலிக்கப்படும். நேற்று 30 முதல் 50 ரூபாய் வரை வசூலித்தனர்.

'ஆன்லைன்' செயலி வாகன ஓட்டுநர்களும் 30 முதல் 50 ரூபாய் வரை அதிகம் வைத்து, பயணியரை அழைத்து சென்றனர்.

Advertisement