காலாவதியான பொருட்கள் விற்பனை அதிகரிப்பு தேவை உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சுகாதாரத்துறை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்தங்களது உணவுப் பொருட்களின் பெயர், விலாசம், தயாரிப்பு காலாவதி தேதி உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் தெரியும் வகையில் அச்சிட வேண்டும் என்பது அடிப்படை விதி.

இந்நிலையில் வளர்ந்து வரும் ராஜபாளையம் நகர் பகுதியில் பெரும்பாலான உணவகங்கள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றில் கலப்பட உணவு பொருட்கள், அதிக நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள் விற்பனை எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது.

ஓட்டல்களில் விற்பனையாகாத உணவுகளை பிரிட்ஜ்களில் வைத்து விற்பது, பாஸ்ட் புட் கடைகளில் எந்தவித பாதுகாப்பும் சுகாதாரமும் இன்றி உணவு தயாரிப்பு போன்றவை மக்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது.

இவற்றைக் கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இது குறித்து எந்த புகாரும் வரவில்லை என்பதே பதிலாக உள்ளது.கடமை தவறுவதால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவது தொடர்வதை தடுக்க நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் அவசியம்.

Advertisement