சிவகிரியில் பட்டப்பகலில் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஈரோடு: சிவகிரி, மோளபாளையம் நால்ரோடு ராயல் அவென்யூவில் குடி-யிருப்பவர் மூர்த்தி. முத்துாரை அடுத்த வாலிபனங்காடு என்ற இடத்தில் ஹோட்டல் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை ஹோட்டலுக்கு மனைவி, மகளுடன் சென்று விட்டு இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பினார்.


வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்று பவுன் மதிப்பிலான தங்க தோடு, நகை மற்றும் ௧.௭௦ லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. சிவகிரி போலீசார் குற்றவாளி-களை தேடிவருகின்றனர்.
சிவகிரியில் பட்டப்பகலில் நடந்த திருட்டு, அப்பகுதி மக்கள் மத்-தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement