பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமி கைது

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையத்தில் அசோக்-குமார் என்பவரின் பட்டியில் புகுந்து இரு ஆடுகளும், நல்லுாரில் பாலசுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான இரு ஆடுகளும் திருட்டு போனது.
இதில் பாலசுப்ரமணியனுக்கு சொந்தமான ஆடுகளை பட்டப்ப-கலில் மர்ம நபர்கள் பைக்கில் திருடி சென்றனர். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆடு திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சேவூர், புது சந்தை பகுதியை சேர்ந்த மூர்த்தி, 41, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதான ஆடு களவாணி மூர்த்தி மீது, பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement