மாநகரில் பயன்பாடற்ற போலீஸ் கூண்டுகள் போக்குவரத்துக்கு இடையூறு என வருத்தம்
ஈரோடு: ஈரோடு மாநகரில் பயன்பாடற்ற போலீஸ் கூண்டுகள், போக்குவ-ரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
ஈரோடு மாநகரில் போக்குவரத்தை கண்காணிக்க, மாநகர தெருக்-களில் குறிப்பாக போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில், கூண்டு அமைத்து போலீசார் நியமிக்கப்பட்டனர். தற்போது கூண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றில் பல ஆண்டுகளாக போலீசாரை பார்க்க முடிவதில்லை. இந்த வகையில் சத்தி சாலையில் இரு-வேறு இடங்கள், பெருந்துறை சாலையில் ஒரு இடம், சூரம்பட்டி நால்ரோட்டில் ஒரு இடத்தில் போலீஸ் கூண்டு உள்ளது.
போலீசார் இவற்றை பயன்படுத்தாத நிலையில் பிரச்னைக்குரிய போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளன. மேலும் வாகன ஓட்டி-களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: போலீஸ் கூண்டு-களை போலீசார் பயன்படுத்தாததால் துாசி படிந்து காணப்படு-கிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக சில இடங்களில் அமைந்துள்ளது. எனவே இவற்றை அகற்ற வேண்டும் அல்லது போலீசார் அமர்ந்து போக்குவரத்தை கண்கா-ணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி