பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
வானுார் : பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருவக்கரை அடுத்த எறையூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பத்மா, 53; இவர் வீட்டின் எதிரே சிமெண்ட் தரை அமைத்திருந்தார். இந்த தரையை அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரின் மகன் உடைத்தார். இதனை பத்மா, தேவி வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தேவி மற்றும் அவரது உறவினர்கள் சாந்தி, அவரது தாய் தெய்வராணி ஆகியோர் பத்மாவை தாக்கினர்.
இது குறித்து பத்மா கொடுத்த புகாரின் பேரில், தேவி, சாந்தி, தெய்வராணி ஆகிய 3 பேர் மீது வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!
Advertisement
Advertisement