என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஈரோடு: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு திட்டம் (என்.எம்.எம்.எஸ்.) மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ--மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய திற-னாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.


நடப்பாண்டு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில், 84 மாணவ - -மா-ணவிகள் வெற்றி பெற்று ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஈரோட்டில் நடந்தது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், பாராட்டு சான்-றிதழ்களை வழங்கினார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் கற்றல் முழு அடைவு பெறுவதற்காக நடத்தப்பட்ட 100 நாட்கள் சவாலில் வெற்றி அடைந்த தொடக்க, நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி (தொடக்க கல்வி) பரமசிவம், வட்டார கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement