கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கொல்லிம-லையில் முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை, நவக்காடு வரை உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என, நேரடி ஆய்வில் ஈடுபட்டார். அவருடன் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., தனராசு கலந்துகொண்டார். ஆய்வின் போது, பழைய மது


விலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து அவர்க-ளது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்-சுவோர், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு கடும் சட்டம் இயற்றியுள்ளது; எனவே யாரும் கள்ளச்சாராய குற்-றங்களில் ஈடுபடக்கூடாது; கள்ளச்சாராயம் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்த, அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்; கள்ளச்சாராயம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுமக்-களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement