இரண்டு விவசாயிகள் ஒரே நாளில் தற்கொலை

ஹூப்பள்ளி : குந்த்கோல் தாலுகாவின், பரத்வாட் கிராமத்தில் ஒரே நாளில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஹூப்பள்ளி மாவட்டம், குந்த்கோல் தாலுகாவின் பரத்வாட் கிராமத்தில் வசித்த விவசாயிகள் ரவிராஜ் ஜாடர், 42, பசவன கவுடா பாட்டீல், 56. இவர்கள் வங்கி மற்றும் தனியாரிடம், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினர். அதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

நான்கைந்து ஆண்டுகளாக, வறட்சி, வெள்ளப்பெருக்கால் விளைச்சல் பாழானது. போட்ட முதலீடும் கைக்கு வரவில்லை. தொடர்ந்து நஷ்டத்தை அனுபவித்தனர். மற்றொரு பக்கம் கடன்காரர்களின் நெருக்கடி அதிகரித்தது. மனம் நொந்த விவசாயிகள், நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே கிராமத்தில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குந்த்கோல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement