சிங்கப்பூர் அமைச்சர் பழநியில் தரிசனம்

பழநி: பழநி கோயிலில் சிங்கப்பூர் உள்துறை, தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் சண்முகம் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக சுவாமி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவருக்கு போலீசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

பின் கார் மூலம் கிரி வீதி வரை வந்த அவர் பேட்டரி காரில் ரோப் கார் நிலையம் வந்தடைந்தார். கோயிலில் உச்சி கால பூஜையில் பங்கேற்று தரிசித்தார். போகர் சன்னதியில் வழிபட்டார். அதன் பின் ரோப்கார் மூலம் கீழ் இறங்கி ஹெலிகாப்டர் மூலம் திரும்பிச் சென்றார்.

Advertisement