தனிக்கட்சி தொடங்க திட்டமா? செப்., 4ல் அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.,

சென்னை: மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தர்மயுத்தம், சட்டப்போராட்டத்தை எதற்காக நாம் கையில் எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் தான் நாம் உயிர்மூச்சு இருக்கும் வரையில் பயணிப்போம்.
அரசியல் ரீதியான கட்சிகளுக்கு, அதை சார்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால்,பொதுமக்களின் நன்மதிப்பை எந்த கட்சியின் தலைவர் பெறுகிறாரோ, அவர் தான் ஆளுகின்ற உரிமையை பெற முடியும். அதைத் தான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா செய்தார்கள்.
அந்த வரலாற்றை மீண்டும் நாம் உருவாக்கிடவே, இந்த தர்மயுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். அதற்கு முழுவடிவம் கொடுப்பதற்காக உங்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து, தற்போது ஒரு முடிவை எடுத்து இருக்கிறோம். சில முடிவுகள் வெளியே முடியாது. சில முடிவுகளை வெளியே சொல்ல வேண்டி இருக்கும். அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். அதை எல்லாம் எங்களைப் போல நீங்களும் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
மதுரையில் செப்டம்பர் 4ம் தேதி மாநாடு நடத்தப்படும். அதில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். 2 ஆண்டு காலம் எவ்வளவோ கடினமான சூழ்நிலைகள் வந்தன. இருந்தாலும், எங்களின் சக்தியையும், திறமையையும் வெளிக்காட்டவே, ராமநாதபுரம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டோம். அந்தத் தேர்தலின் நமக்கு விழுந்த ஓட்டுக்களின் மூலம், மக்களின் ஆதரவு நமக்கு தான் இருக்கிறது என்பது வெளிப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!
-
கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்