இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வீதிகளில் திரண்ட மக்கள்

1

ஜகார்த்தா; இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.



இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் மாலுக்கு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டங்கள், வீடுகள் குலுங்கியது.


அச்சம் அடைந்த பொதுமக்கள் பீதி அடைந்து வீதிகளில் திரண்டனர். பயத்தின் காரணமாக மீண்டும் வீடுகளுக்குள் செல்லாமல் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர்.


நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட தரவுகளின் படி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்ற விவரங்களும் வெளியாகவில்லை.


கடந்த 2004ம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமி, இந்தோனேசியாவின் சுமத்ரா அருகே மையம் கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement