விவசாயி வீட்டில் 21 பவுன் நகை திருடிய உறவினர் கைது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பனஞ்சாயலில் விவசாயி விஜயன் வீட்டில் 21 பவுன் நகைகளை திருடிய உறவினர் பிரசன்னாவை 20, போலீசார் கைது செய்தனர்.

பனஞ்சாயல் விவசாயி விஜயன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டிலும், மகள் சென்னையிலும் வசிக்கின்றனர். இவரது சின்னம்மா பேரன் பிரசன்னா. இவரை தன் பேரன் போல் விஜயன் வளர்த்து வருகிறார். ஜூலை 8 வீட்டில் பீரோவை திறந்து பார்த்த போது தங்க நெக்லஸ், மோதிரம், செயின் உள்ளிட்ட 21 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிந்தது.

சாவி பீரோவிற்கு அருகில் இருந்தது. எனவே வெளி ஆட்கள் திருட வாய்ப்பில்லாததால் பிரசன்னாவிடம் விஜயன் குடும்பத்தினர் விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணான தெரிவித்தார். இதுகுறித்த புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்தனர். அதில் நகைகளை பிரசன்னா திருடியது தெரியவந்தது. நகைளை மீட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement