மகனை கொன்று தந்தை தற்கொலை

மூணாறு: கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே காஞ்சிரமற்றத்தில் பேச்சு திறனற்ற மூன்று வயது மகனை கொலை செய்த தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிமற்றத்தில் வாடகை வீட்டில் உமேஷ் 34, மனைவி ஷில்பா 29, மகன் தேவ் 3, ஆகியோருடன் வசித்தார்.
உமேஷ் கூலி வேலை செய்து வந்ததுடன், லாட்டரி விற்பனையும்செய்தார். ஷில்பா ஜவுளிக் கடையில் வேலை செய்கிறார். மூன்று வயது ஆகியும் மகன் தேவ் பேச முடியவில்லை. அதனால் உமேஷ் மனஉளைச்சலுடன் இருந்தார்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்த ஷில்பா வீட்டிற்குள் கணவர், மகன் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் அழுதார். மகனை துாக்கிட்டு கொலை செய்து விட்டு உமேஷ் பின்னர் தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வாசகர் கருத்து (1)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
14 ஜூலை,2025 - 08:26 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'
-
திருமணம் செய்ததால் போக்சோ வழக்கு ரத்து
-
காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை
-
மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ரயில்வேயில் எந்த வேலைக்கும் தகுதி வாய்ந்த ஆள் இல்லை; ராமதாஸ் குற்றச்சாட்டு
-
10 இடங்களில் வெயில் சதம்
Advertisement
Advertisement