மணல் கொள்ளைக்கு கடுமையான சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சென்னை: மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும் , அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
"காலை 11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர்.இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!
இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது .
இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.






மேலும்
-
போலீசார் தாக்கியதில் மாணவன் உடல் நலம் பாதிப்பு; நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு
-
சுரேஷ் கோபி படத்துக்கு சென்சார் சான்று கிடைத்தது
-
தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு பின்பற்ற காங்., கோரிக்கை
-
குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது: ஐகோர்ட்
-
இக்கட்டான நிலையில் இந்திய கால்பந்து சுனில் செத்ரி வேதனை
-
காஞ்சிபுரத்தில் 20ம் தேதி பன்னீர்செல்வம் அணி கூட்டம்