45 ஆண்டுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1979 முதல், 1982 வரை படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, 45 ஆண்டுக்கு பின் நேற்று, பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த சந்திப்பில், 60 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, பள்ளியில் படித்த காலத்தில் நடந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement