லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம்

லடாக்: லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை லடாக்கில் சுமார் 15,0000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராணுவ வான் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை நிகழ்த்தினர்.
மிக வேகமாக நகரும் இரு இலக்குகளை, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக தாக்கி அழித்தது. ராணுவத்தின் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மூன்றாம் மற்றும் நான்காம் படைப்பிரிவுகளாக சேர்க்கப்பட உள்ளது.
ஏற்கனவே, ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட சீனா தயாரித்த விமானங்கள் மற்றும் துருக்கி ட்ரோன்களின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது. ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு இந்தியா ராணுவத்தின் வான் பாதுகாப்புக்கு கூடுதல் பலமாகும்.