குடிகார கணவனை குழி தோண்டி புதைத்த மனைவி

1

குவஹாத்தி: அசாமில், குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று குழி தோண்டி புதைத்துவிட்டு நாடகமாடிய பெண், போலீசுக்கு பயந்து சரணடைந்தார்.


வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள பாண்டு ஜெய்மதி நகரில் வசித்து வந்தவர் சோபியல் ரஹ்மான். அவரது மனைவி ரஹீமா.


பழையப்பொருட்கள் வியாபாரியான சோபியலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.


இந்நிலையில், கடந்த மாதம் முதல் சோபியலை காணவில்லை. மனைவி ரஹீமாவிடம் உறவினர்களும், அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அவர், கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டதாக ரஹீமா கூறியுள்ளார். பின், சில தினங்களில் ரஹீமாவும் தலைமறைவானார்.



இதில் திடீர் திருப்பமாக, ஜலுக்பரி போலீஸ் ஸ்டேஷன் சென்ற ரஹீமா, கணவரைக் கொன்று உடலை வீட்டிலேயே குழி தோண்டி புதைத்துவிட்டதாகக் கூறி சரண் அடைந்தார்.


கடந்த மாதம், 26ம் தேதி இரவு, அதிக போதையில் இருந்த சோபியல் ரஹ்மான், தன்னிடம்
சண்டையிட்டதால் ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துஉள்ளார்.


போலீசார் வீட்டிலிருந்து உடலை தோண்டி எடுத்தனர். ஐந்து அடி ஆழம் வரை இருந்த குழியை, ரஹீமா தனியாளாக தோண்டியிருக்க முடியாது என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


மேலும் வீட்டில் இருந்து வேறு சில தடயங்களும் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தக் கொலையில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement