ஏ.டி.எம்., கார்டு மூலம் திருட்டு மர்ம நபரை தேடும் போலீசார்

கரூர், கரூரில், காகித ஆலை ஒப்பந்த தொழிலாளியின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், நடையனுார் இளங்கோ நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 55; புகழூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி. இவரது மகன் பரணிதரன் கடந்த, 10ல் தந்தை பாலசுப்பிர
மணியத்தின் ஏ.டி. எம்., மூலம், கரூர் பெரியார் நகரில் உள்ள டி.எம்.பி., ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். பிறகு, ஏ.டி.எம்., கார்டை அங்கேயே விட்டு விட்டார். அந்த கார்டை எடுத்த மர்ம நபர், 50 ஆயிரம் ரூபாயை அதன் மூலம் எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, பால சுப்பிரமணி போலீசில் புகார் கொடுத்தார். கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement