நிலுவை பிடிவாரன்ட் வழக்குகள் எத்தனை? டி.ஜி.பி., கமிஷனருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: ''தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன'' என டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஜூலை 14) ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
* தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.
* நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்கள் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்.
* வாரன்டை செயல்படுத்தவில்லை என்றால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புதிதாக வாரன்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.
* எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாரன்ட்களை நிலுவையில் வைக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை.
* எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு
ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



மேலும்
-
துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!
-
கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்