பூவரசன்குப்பம் கோவிலில் இன்று தேர் திருவிழா  

கடலுார்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று தேர் திருவிழா நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்ச விழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. 6ம் தேதி த்வஜாரோகணத்தை தொடர்ந்து தினசரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது.

நேற்று முன்தினம் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை காளிங்க நர்த்தனம், மாலை தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு பிரம்மோற்சவ தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement