போதை பொருள் வைத்திருந்த ஐ.டி., ஊழியர்கள் மூவர் கைது
எம்.ஜி.ஆர்.நகர், போதை பொருட்கள் வைத்திருந்த ஐ.டி., ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்.நகர் கே.கே., சாலையில் உள்ள ஹோட்டலில் சிலர் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருடன் இணைந்து, அவர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் நான்கு பேர் சிக்கினர்.
விசாரணையில், ஐ.டி., ஊழியர்களான எம்.ஜி.ஆர்.நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன், 27, போரூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார், 25, பெரம்பூரைச் சேர்ந்த பிரசாந்த், 29 மற்றும் வளசரவாக்கத்தைச் சேர்ந்த டெய்லர் மணிகண்டசாமி, 33, என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 3 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள், 28 எம்.எல்., கஞ்சா குழம்பு மற்றும் 7,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
சங்கரநாராயணனுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்த, அவிநாஷ் மற்றும் நரேன் ஆகியோரை தேடி வருகின்றனர்.